Friday, July 07, 2006

வேணுகோபால் என்ற மருத்துவர்

தன்னை பணியிலிருந்து நீக்கியதும், அதை சிறுமைப்படுத்தும் விதத்தில் செய்ததும் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக (It is a lasting feeling of pain that hurts terribly!) Dr.வேணுகோபால் கூறியுள்ளார். அவர் பக்கத்து விளக்கத்தை எடுத்துக் கூற அவருக்கு வாய்ப்பளிக்காமல், அவரை பணி நீக்கம் செய்தது சரியான அணுகுமுறை இல்லை. அவரை நீக்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, அவரை அறைக்கு வெளியே காத்திருக்க வைத்தது அதை விடக் கொடுமை ! அமைச்சர், வேணுகோபாலுடன் AIIMS-இல் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசி, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி வகுத்திருக்கலாம் தான் ! ஆனால், நம்மூர் அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல் தானே செயல்படுகிறார்கள் :-( அமைச்சர் தான் AIIMS-இன் தலைவர் என்பது உண்மை தான். ஆனால், அதை குடியரசுத் தலைவர் பதவி போல Advisory பதிவியாகத் தான் பார்க்க வேண்டும். முக்கியமாக, AIIMS போன்ற Autonomous கழகங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது மிக அவசியமாகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வாறு இருந்தது தான், AIIMS-இன் வளர்ச்சிக்கும் அதன் உலகளாவிய மதிப்புக்கும் காரணம் !

இப்போது Dr.வேணுகோபாலைப் பற்றி:

Dr.வேணுகோபால் உலகப் பிரசித்தி பெற்ற ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர். AIIMS-இல் 40 ஆண்டுகள் அவர் பணி புரிந்து பல நல்ல திட்டங்களை வகுத்து அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தம் தான் அவர் பணி வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். இதுவே சில அரசியல்வாதிகளை (முக்கியமாக அமைச்சரை) அவருக்கு எதிராக திருப்பி, அவர் மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட காரணமாய் அமைந்து விட்டது. அரசியல் சூழ்ச்சி விளையாட்டு குறித்து அவரின் அறியாமையே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது ! கொஞ்சம் அரசியல் அறிவு / சூட்சமம் தெரிந்தவராக இருந்திருந்தால், அமைச்சருடன் சமரசம் செய்து கொண்டு போயிருப்பார் அல்லவா ? அவருக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் மேல் "ESMA" பாயலாம் என்று யாரோ அவரிடம் கூறியபோது, திரு.வேணுகோபால் "ESMA"வை ஆஸ்த்மா என்று புரிந்து கொண்டார் என்றால் பாருங்களேன் !

1996-இல் AIIMS டைரக்டராக அவரை நியமனம் செய்தபோது, அப்பதவியை முதலில் அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ! தனது 18 வயதிலிருந்து, 46 வருடங்கள் AIIMS-இல் தொடர்ந்து சேவை செய்த ஒரு புகழ் பெற்ற மருத்துவரை நேற்று முளைத்த காளான்கள் மோசமான முறையில் தூக்கி எறிந்திருப்பது வருந்தத்தக்கதே. படித்த காலத்தில், பிரதமர் நேருவிடமிருந்து, சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் வாங்கியவர் திரு.வேணுகோபால். மருத்துவப் பட்ட மேற்படிப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியவர். பெருமை வாய்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டென்டன் கூலியிடம் (Denton Cooley) பயிற்சி பெற்றவர். அதைத் தொடர்ந்து, 1974-இல் AIIMS-இல் இதய அறுவை சிகிச்சைத் (open heart surgery) துறையை நிறுவி, நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பயிற்றுவித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 62000 இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளவர் திரு. வேணுகோபால் ! இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்கும் உரியவர் திரு.வேணுகோபால் ! 1998-இல் அவரது அயராத மருத்துவ சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்றவர் திரு.வேணுகோபால்.

என்றென்றும் அன்புடன்
பாலா

30 மறுமொழிகள்:

குழலி / Kuzhali said...

//நேற்று முளைத்த காளான்கள் மோசமான முறையில் தூக்கி எறிந்திருப்பது வருந்தத்தக்கதே
//
இந்த நேற்று முளைத்த காளான் 100 கோடிக்கும் மேலுள்ள இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர், யார் ஏற்று கொண்டாலும் இல்லையென்றாலும்...

அது சரி 17 பேர் கொண்ட நிர்வாக குழுவில் 14 பேர் அவரது நீக்கத்தை ஆதரித்திருக்கின்றார்களே :-)
அந்த 14 பேரும் நேற்று முளைத்த காளான்களா?

ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
ஜெ. ராம்கி said...
This comment has been removed by a blog administrator.
enRenRum-anbudan.BALA said...

குழலி,
நன்றி !
//இந்த நேற்று முளைத்த காளான் 100 கோடிக்கும் மேலுள்ள இந்தியாவின் சுகாதாரத்துறை அமைச்சர், யார் ஏற்று கொண்டாலும் இல்லையென்றாலும்...
//
ஆனால், தேர்தலில் நின்று மக்களல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர் ஆன மாதிரி தெரியலையே ;-)

enRenRum-anbudan.BALA said...

ராம்கி,
வாங்க, வாங்க !!!
எந்த கமெண்ட்டை நீக்கணும் ? ஒண்ணும் புரியலையே ?????????

//படையாட்சியாக பிறந்த ஒரே காரணத்துக்காக அன்புமணிக்கு எதிராக மேல் சாதி வர்க்கம் ஒரு ஆட்டம் ஆடித்தீர்த்ததை எம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். தர்மம் வெல்லும். திரும்பவும் வேணுகோபால் பதவியிழப்பார்.
//
:))))))))))

வஜ்ரா said...

பாலா,

இந்த விஷயத்தில் பிரதம மந்திரி மன்மோகன் சிங் என்ன முடிவு எடுப்பார் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ஏன் என்றால், நீக்கத்தை ஆதரித்து முடிவு எடுத்தால் மானம் கப்பலேறும். ஜாதி அரசியலுக்கு துணை போனதாகக் கருதப்படும்.

நீக்கத்தை எதிர்த்தால், பதவி கூடப் போகலாம்.

காங்கிரஸ் கட்சி இது அன்புமணியின் வேலை மட்டுமே என்று தன்னை கழற்றிக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

said...

Even for criminals, they will have a chance to give their explanation.. but for Dr.Venugopal they have not given a chance to give his explanation...

I am not saying What ever Dr venugopal did was right. but this is not the way to handle this issue.

There should have been an enquiry before sacking him.. these things you can not expect from the our extraordinary Health minister.

said...

always truth triumphs
satyameva jayathe
anbu mani can sack one venu gopal
but he cannot sack Venu's servcies from people'e mind
am an 83 years man treated by venu last 3 years back, if am alive venu is also one of the reasons.
let god gives him good health.
let me know one thing?
Anbu mani has treated how many?
has he a Doctor?
he does nothing other than minting crores for Thaila puram

Muthu said...

bala,

venugopal may be good doctor.agreed.but that does not give rights to behave autocratically.

இப்படி ஒவ்வொரு ஆளும் நான் எவ்வளவு பெரிய அறிவாளி என்று கூறி தன் சாதி சார்ந்து நடவடிக்கை எடுத்தால் நாடு நாடாக இருக்காது.

said...

என்ன படிச்சி என்ன சாதிச்சி என்ன பிரயோசனம். பவர்புல் அரசியல்வாதியோட மகன் சொல்றாரு.. போடான்னா.. போவேண்டியதுதானே? ஆட்டோ அனுப்ப எவ்வளவு நேரமாவும்? மூஞ்ச பேத்துடமாட்டாரு மந்திரி?

அருண்மொழி said...

//ஆனால், தேர்தலில் நின்று மக்களல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர் ஆன மாதிரி தெரியலையே //

அப்ப இத்தான் matterஆ.

மதிமூடர் பின்வழியா போனார் - சரி. என்னங்க செய்வது, இப்படியும் போகலாம் என்று தமிழகத்தை சேர்ந்த அறிஞர் பல வருடங்களுக்கு முன் அவருக்கு வழிகாட்டியுள்ளார். இவரும் அதை கப்புன்னு பிடித்துக்கொண்டார் (இவருக்கு தான் மதியில்லையே).

தகுதி,திறமை உள்ள சாமி 98ல் பதவி வேண்டாம் என்று ஏன் மறுத்தார்?. பிறகு 2003ல் ஏன் ஏற்றுக்கொண்டார்? இதை பற்றி சற்று விளக்க முடியுமா?

அப்படியே இவரை நீக்க கை தூக்கிய 14 பேரை பத்தியும் பேசுங்களேன். அவங்க ஏன் கை தூக்கினாங்க? அவர்களும் மதிமூடர்களா?

Anbumani brought up a resolution. 14 people accepted it. 3 opposed it. So it was passed. If 9 people opposed it - this event wouldnt have happend. Please think about it.

enRenRum-anbudan.BALA said...

வஜ்ரா சங்கர்,
பிரதமரின் கைகள் கூட்டணி கட்சிகளால் பலமாக கட்டப்பட்டு இருக்கும் நிலையில் அவர் பாவம் என்ன செய்ய முடியும் ???? நன்றி.

anonymous 1,
Thanks !
That is my main point, the way the issue was handled was unfair !

anonymous 2,
thanks !

என்றென்றும் அன்புடன்
பாலா

enRenRum-anbudan.BALA said...

முத்து,
நன்றி.
வேணுகோபல் தவறு செய்திருக்கலாம். சாதி சார்ந்தது என்பதை ஏற்க இயலவில்லை.

அனானிமஸ்-3,
நன்றி
ஆட்டோ பயம் தேவை தான் :)

அருண்மொழி,
கருத்துக்களுக்கு நன்றி.
//
//ஆனால், தேர்தலில் நின்று மக்களல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர் ஆன மாதிரி தெரியலையே //

அப்ப இத்தான் matterஆ.
//
குழலி கேடதற்கு வேடிக்கயையாகத் தான் பதில் கூறினேன் !

//அப்படியே இவரை நீக்க கை தூக்கிய 14 பேரை பத்தியும் பேசுங்களேன். அவங்க ஏன் கை தூக்கினாங்க? அவர்களும் மதிமூடர்களா?
//
அரசியலில் யார் யாரை வேண்டுமானாலும் கை தூக்க வைக்க இயலும் ;-)
I am only telling the way the issue has been handled smacks of political vendetta !

enRenRum-anbudan.BALA said...

'விடாது கறுப்பு' அவர்களின் பின்னூட்டம்.

###########
இட ஒதுக்கீடு என்ற பேச்சை எடுத்தாலே பார்ப்பனர்களுக்கு எங்கெல்லாமோ நோகுது! பார்ப்பன மாணவர்களைத் தூண்டிவிட்டு போராட்டம் செய்யச் சொன்ன வேணுகோபாலை நடுத்தெருவில் நிறுத்திவைத்து சவுக்கால் அடிக்க வேண்டும். அவனை பதவி நீக்கம் செய்தது சரியே.

அவனுக்கு ஆதரவாக பதிவுகள் எழுதும் அன்புடன்பாலா, ரவி சீனிவாஸ், பரம்ஸ் ...... அடித்து துரத்துவோம்.
##################

முத்துகுமரன் said...

இப்போ AIIMS ல் ஸ்டிரைக்கினால் செத்து கொண்டிருப்பவர்களுக்கும் பொறூப்பு வேணுகோபால்தான். நிறைய உயிரை காப்பாத்தி இருக்கிறதுனால இந்த உரிமையோ??
மருத்துவகழகத்தின் இயக்குநராக இல்லாமல் மனுக்கழகத்தின் இயக்குநராக நடந்து கொண்டதற்குத்தான் இந்த வெகுமதி.

enRenRum-anbudan.BALA said...

விடாது கறுப்பு,
கருத்துக்களுக்கு நன்றி.

As mentioned earlier, the way the issue has been handled smacks of political vendetta !

I have also mentioned
"வேணுகோபல் தவறு செய்திருக்கலாம். சாதி சார்ந்தது என்பதை ஏற்க இயலவில்லை."

முத்துகுமரன் said...

//சாதி சார்ந்தது என்பதை ஏற்க இயலவில்லை."//

எப்படி. ஆதாரமாக எதையாவது சொல்லுங்களேன். திரும்ப திரும்ப சொல்வதால் மட்டும் உண்மையாகிவிடுமா??. தவறு செய்திருக்கிறார் என்பது வரை ஒத்து கொள்ளத்தயாராக இருந்துவிட்டு அதன் மூலம் எது என்பதை மட்டும் உணர மறுப்பது ஏனோ?.

enRenRum-anbudan.BALA said...

முத்துக்குமரன்,
நன்றி.
//தவறு செய்திருக்கிறார் என்பது வரை ஒத்து கொள்ளத்தயாராக இருந்துவிட்டு அதன் மூலம் எது என்பதை மட்டும் உணர மறுப்பது ஏனோ?.
//
நீங்கள் உணர்ந்ததையெல்லாம் நான் உணர வேண்டும் என்பதில்லையே ? நீங்கள் கேட்ட கேள்வி உங்களுக்கும் பொருந்தும் !

said...

//நீங்கள் உணர்ந்ததையெல்லாம் நான் உணர வேண்டும் என்பதில்லையே ? நீங்கள் கேட்ட கேள்வி உங்களுக்கும் பொருந்தும் ! //

பாலா,

தங்களுக்கு முத்திரை குத்த வேண்டும் அது தான் நோக்கம். தங்களை அன்புமணியின் பு.பி என்று மற்றவர்கள் சொல்வதற்க்கு முன் முந்தி கொள்ளும் சூட்சமம்.

said...

விடாது கறுப்பு
அவனுக்கு ஆதரவாக பதிவுகள் எழுதும் அன்புடன்பாலா, ரவி சீனிவாஸ், பரம்ஸ் ...... அடித்து துரத்துவோம்

விடாது கறுப்பு,
கருத்துக்களுக்கு நன்றி.

Nakkal.

Unknown said...

என்றென்றும் அன்புடன் பாலாவுக்கு. திரு விடாது கருப்பு அவர்களின் பின்னூட்டம் தங்களுக்கு மட்டுமே யானால் அதை அவர் எனக்கும் அனுப்பியது ஏன் ? நான் எதையும் மட்டுறுத்தவில்லை மேலும் இது தங்கள் வலையில் தங்களால் தான் பின்னூட்டமாக பதியப்பட்டது என்னுடையதில் அவர் அனுப்பியது அப்படியே வெளியிடப் பட்டது தனிமடலில் சாட்சி அனுப்புவதாயின் அனுப்பவும். ஆனாலும் அது விடாது கருப்பின் பின்னூட்டமாகவே இருக்கும். பொட்டீகடையின் கருத்து அவர் பதிவில் பின்னூட்டமாக இட்டிருப்பதை தாங்கள் எடுத்து விட்டதாக அது குறித்து பொட்டீகடையிடமும் கொஞ்சம் கேளுங்கள் ஆனால் பிளாகர் கமெண்ட் நேரப்படி அது எனக்கே முதலில் வந்திருக்கிறது
அன்புடன் மகேந்திரன்.பெ

Machi said...

//ஆனால், தேர்தலில் நின்று மக்களல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அமைச்சர் ஆன மாதிரி தெரியலையே ;-)
//

இது நம்ம பிரதம மந்திரிக்கும் பொருந்துமுங்கோ :-)

http://kurumban.blogspot.com/2006/04/blog-post_05.html


அவரது நீக்கம் சர்ச்சைக்குறியது தான் ஆனால் இதற்கு மூல காரணம் இடஒதுக்கீட்டை எதிர்த்து நடந்த போராட்டத்தில் அவர் நடந்துகொண்ட முறை. காரணம் சாதிய வெளிப்பாடு, இல்லாவிட்டால் போராட்டம் மருத்துவமனையின் செயல்பாடுகளை பாதிக்க அவர் விட்டிருக்கமாட்டார் என்று நம்பலாம்.

enRenRum-anbudan.BALA said...

//தங்களுக்கு முத்திரை குத்த வேண்டும் அது தான் நோக்கம்.
//
I only feel sorry for anyone who tries to brand me, as I am not the type of person 'some people' think I am !!! That is all.

Dear CT,
Thanks for your appreciation !
//Peran Maranum
Magan Manium
Ammai(sonia) Appanai( manmohan singh) sutri
Naradhar(arjun singh) idam irundhu
ida othukeedai petru varuvargal
Kavali en appa ??????????
//
:)))))
Mahendran,
// திரு விடாது கருப்பு அவர்களின் பின்னூட்டம் தங்களுக்கு மட்டுமே யானால் அதை அவர் எனக்கும் அனுப்பியது ஏன் ?
//
You must ask திரு விடாது கருப்பு !

//பொட்டீகடையின் கருத்து அவர் பதிவில் பின்னூட்டமாக இட்டிருப்பதை தாங்கள் எடுத்து விட்டதாக அது குறித்து பொட்டீகடையிடமும் கொஞ்சம் கேளுங்கள்
//
I asked him and he has responded and accepted his mistake.

குறும்பன்,
நன்றி.

said...

//அது சரி 17 பேர் கொண்ட நிர்வாக குழுவில் 14 பேர் அவரது நீக்கத்தை ஆதரித்திருக்கின்றார்களே :-)
அந்த 14 பேரும் நேற்று முளைத்த காளான்களா?//

Ramadoss said 13-3 in AIIMS board voted to sack Venugopal, seven say they don’t agree
Toufiq RashidPosted online: Sunday, July 09, 2006 at 0000 hrs Print Email Doctoring the vote: His chosen said yes, others now qualify
Related Stories AIIMS: Venugopal leave ends, may resume work
Docs sing Venugopal’s praise, attack Ramadoss
Quota: Health Minister assures Arjun of support


NEW DELHI, JULY 8:For Health Minister Anbumani Ramadoss, the decision to sack AIIMS director P Venugopal this week—a decision stayed by the Delhi High Court—is an open and shut case. On Wednesday, he announced that the 17-member “institute body” of the All India Institute of Medical Sciences had voted 13-3 in favour of the resolution to fire Venugopal.

That figure doesn’t tell the story.

A close scrutiny of the board’s composition and interviews with members confirm that two members were absent; a third, Venugopal himself, was asked to stay away from the meeting. This reduced the board to 14. While three came out in open support of Venugopal, four others have now told The Sunday Express that they did not vote the way the Minister makes it out to be. And those who backed the Minister were his handpicked members who report to him.

In short, at least half of the board members present did not endorse a confrontation with Venugopal.

Formed by an Act of Parliament in 1956, AIIMS was set up as “a body” whose composition is defined by law. The current board was constituted in February 2005—the previous one had finished its five-year term in November 2004—when Ramadoss was the Health Minister.

The original Act has no provision for the Health Minister to be part of the board but Ramadoss nominated himself as president. In this, he was sticking to tradition—since 1983, Health Ministers have foisted themselves onto the board.

Consider the following:

Clause 4 (E) of the Act says that ‘‘five persons of whom one shall be a non-medical scientist representating the Indian Science Congress Association, to be nominated by the Central government.’’

1,2,3: Under this, Ramadoss chose himself, his sister’s father-in-law Dr A Rajashekaran and his Secretary P K Hota, all of whom backed the resolution to sack Venugopal. For Rajashekaran, a urologist, this is his second term on the board. He was in the previous body as well, appointed by then Health Minister T Shanmugham, of the same PMK party as Ramadoss.

4: The “non-medical” Science Congress representative was Prof B P Chatterjee, biochemistry professor at the Indian Association for the Cultivation of Science, Kolkata. When contacted by The Sunday Express, Chatterjee, said: “I told them I can’t vote in favour of the resolution. We requested that the issue be settled amicably. There was no voting so there is no question of my voting for it.”

5: Nilima Kshirsagar, Dean of Mumbai’s KEM hospital: Absent. Declined to comment.

Four representatives of medical faculties of Indian universities nominated by Ramadoss:

6: K K Talwar, PGI, Chandigarh, Director, who is considered to be in the running for Venugopal’s post: Opposed Venugopal, declined to comment.

7:: Kartar Singh, Director, Sanjay Gandhi institute in Lucknow: “Nobody voted for anybody there. I asked for the issue to be settled mutually. How can I vote against Dr Venugopal? He is my friend, he did my operation.”

8: R Surendran, professor of gastroenterology at Chennai’s Stanley Hospital: Declined to comment

9: S S Agarwal, chief, Central Drug Research Institute, Lucknow: “Dr Venugopal is a highly respectable, talented and decorated medical professional who has dedicated his life to his patients. He should have got an appropriate chance to explain.”

10: Dr S K Srivastava, Director General Health Services (ex-officio member), backed the resolution: ‘‘Court is supreme they must have looked into the merit of the case.’’

11: Raghuveer Singh, Finance Ministry nominee: Unavailable for comment.

12: Dr Karan Singh Yadav, Congress MP (nominated by party): ‘‘It’s an unfortunate episode and I wouldn’t like to comment. All I can say is courts are supreme and we have to respect them.’’

13: R K Dhawan, Congress MP (nominated by party): “The Health Minister did not ask us one by one. All I can say I was for reconciliation and an honourable settlement by both sides.”

14: Delhi University Vice Chancellor Deepak Pental (ex-officio member): Opposed the resolution: “Dr Venugopal needs to be given a chance to explain.”

15: V K Malhotra, BJP MP (party nominee): “We told the Minister that the procedure he is following can’t stand in court of law. Now the court has to probe how he bullied the members by taking the Prime Minister’s name. We have sent a letter to the PM signed by former PM A B Vajpayee and L K Advani.”

16: Sudeep Banerjeee, HRD nominee: Absent; unavailable for comment.

17: P Venugopal (nominated by law): asked to step out of the meeting.

toufiq.rashid@expressindia.com

நன்மனம் said...

ஒரு கீழ்தரமான அரசியல் நாடகத்தை சுயநலத்திற்க்காக நிகழ்த்தும் அமைச்சர் கண்டனத்திற்க்கு உரியவர்.

said...

If you are the director of a company, and the company's CEO
starts a strike in your company, what would you do?

This is not a verdict on venugopal's abilities. This bad thing
happened bcos he involved himself in politics.

enRenRum-anbudan.BALA said...

Anonymous,
Thanks for the detailed information ! Hope it opens the eyes of some people !!!

enRenRum-anbudan.BALA said...

Sridhar, Anonymous,

கருத்துக்களுக்கு நன்றி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails